சற்று முன்
Home / செய்திகள் / கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயம் திறந்து வைக்கப்பட்டது – தமிழகத்திலிருந்து 82 பேர் பங்கேற்பு

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயம் திறந்து வைக்கப்பட்டது – தமிழகத்திலிருந்து 82 பேர் பங்கேற்பு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகராச ஆண்டகையினால் இன்று (23.12.2016) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகராசம் தலைமையில் காலை 9.30 க்கு விசேட கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆலய திறப்பு விழா இடம்பெற்றுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் புதிய ஆலயம் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு அதன் நிர்மாண பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி புதிய ஆலய திறப்பு விழா இடம்பெறவிருந்தது.
எனினும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி உயிரிழந்ததை தொடர்ந்து ஆலய திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
இந் நிலையிலேயே இன்று யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புதிய ஆலயம் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆலய திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் நடராஜன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாகன், தமிழகத்திலிருந்து அருட்தந்தை சகாஜராஜ்,  அருத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கடற்படையினர் பொது மக்கள், பங்கேற்றிருந்தனர்.

தமிழகத்திலிருந்து அருட்தந்தை சகாஜராஜ் தலைமையில் அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் என 82 பேர் ஆலய திறப்புவிழாவில் பங்குபற்றியிருந்தனர்.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com