ஓய்வூதியர்களுக்கான புகையிரத ஆணைச்சீட்டுக்களை வழங்குதல்

trainஓய்வூதியத் திணைக்களத்தால் 01/12/2016 தொடக்கம் ஓய்வூதியர்களுக்கான புகையிரத ஆணைச்சீட்டுக்களை வழங்குதலும் அவற்றுக்கான பயணச் சீட்டுக்களை வழங்குதலும் புகையிரதத் திணைக்களத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியொன்றின் கீழ் செயற்படுத்தும் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பதிவு செய்துள்ள ஓய்வூதியர்களுக்கான சாதாரண புகையிரத ஆணைச்சீட்டு வழங்கல்கள் இணையவழி முறைமையின் ஊடாகவே மேற்கொள்ளப்படும். பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் ஆணைச்சீட்டுக்குரிய பயணச் சீட்டுக்கள் புகையிரத நிலைய அதிபர்களால் முன்னையவாறே மேற்கொள்ளப்படும்.
எனினும் பிரதேச செயலகங்களில் பதிவு செய்துள்ள ஓய்வூதியர்கள் மீண்டும் பிரதேச செயலகங்களுக்கு வருகை தராது பின்வரும் புகையிரத நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று ஓய்வூதிய அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை சமர்ப்பிப்பதன் மூலம் புகையிரதப் பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் – 011-2432908
கண்டி புகையிரத நிலையம் – 081-2222271
பதுளை புகையிரத நிலையம் – 055-2222271
அநுராதபுரம் புகையிரத நிலையம் – 025-2222271
வவுனியா புகையிரத நிலையம் – 024-2222271
யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் – 021-2222271

பதிவு செய்துள்ள ஓய்வூதியர்கள் நேரடியாக பயணச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள இயலும் மேற்படி புகையிரத நிலையங்கள், புகையிரதத் திணைக்களத்தின் கட்டளைப்படி எதிர்காலத்தில் விஸ்தரிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறான மாற்றங்கள் ஓய்வூதியத் திணைக்களத்தால் பிரதேச செயலகங்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும்.

அதுமட்டுமன்றி புகையிரத ஆணைச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பதிவு செய்துள்ள ஓய்வூதியர்கள் மீளவும் பிரதேச செயலகங்களுக்கு வருகை தராது வீட்டில் இருந்தவாறே மொபிட்டெல் தொலைபேசி இலக்கம் 365 இனை அழைத்து தேவையான தகவல்களைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமும் தமது புகையிரத ஆணைச்சீட்டுக்கான பயணச் சீட்டுக்களை நேரடியாகவே ஒதுக்கிக் கொள்ள முடியும். (இதற்’கானதோர் தொலைபேசி அழைப்புக் கட்டணம் தொலைபேசிக் கொடுப்பனவுப் பட்டியலுடன் அறவிடப்படும்)
மேலும் ஓய்வூதியரில் தங்கி வாழும் விவாகமாகாத தொழிலற்ற பிள்ளைகளுக்கு வயதெல்லை அல்லது பாலினைக் கருத்தில் கொள்ளாது புகையிரத ஆணைச்சீட்டுக்களை வழங்க முடியும். எனினும் பிள்ளைகள் ஓய்வூதியரில் தங்கி வாழ்வதனை உறுதிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்களில் குறித்த கிராம அலுவலரின் ஊடாக உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் பிரதேச செயலாளர் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே ஆணைச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள சிபார்சு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி சேவையினப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு முதலில் ஓய்வூதியர்கள் தமது ஓய்வூதியங்களைப் பெற்றுக் கொள்ளும் பிரதேச செயலகங்களூடாக ஒரு முறை மட்டும் இணையவழி முறையில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் PD7 மாதிரிப் படிவத்தினைப் பெற்று பூரணப்படுத்தி கிராம அலுவலர் மூலம் உறுதிப்படுத்தி சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களின் அறிவுறுத்தலுக்கமைய நேரடியாகவோ அன்றி கிராம அலுவலர் ஊடாகவோ குறித்த பிரதேச செயலகங்களுக்கு காலதாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com