ஓமிடல் தோட்ட ஆலயத்துக்கு அம்மன் சிலை கையளிப்பு

photo (5)சாமிமலை ஸ்டஸ்பி ஓமிடல் தோட்ட ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து 31.07.2016 அன்று சங்காபிஷேக இறுதி நாள் பூஜைகள் இடம் பெற்றன.

இதன் போது மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான அம்மன் சிலையொன்று ஆலய அறங்காவலர் நிர்வாகிகளிடம் 31.07.2016 அன்று ஒப்படைக்கப்பட்டது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சாமிமலை அமைப்பாளர் தெய்வேந்திரன் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், பிரதேச இணைப்பாளர்களான சுரேஷ்குமார், பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.photo (1) photo (2) photo (3) photo (4)
photo (6) photo (7)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com