ஓபிணா பேசி இருக்கலாமே ! கலாய்த்தார் எதிர்க்கட்சித் தலைவர்

ஓபினா பேசி இருக்கலாம் என  வடமாகாண  எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா இன்று (21) சபையில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்  நடைபெற்ற மாகாணசபையின் சிறப்பு அமர்விலையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

முன்னாள் விவசாய  அமைச்சர் பொ. ஐங்கரநேசனின் அனுமதியுடன் பளையில் அமைக்கப்பட்ட  காற்றாலை  மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் இரகசியம் பேணப்பட்டது.

இவ்விடயத்தில் அவ்வாறு நடந்திருக்கத் தேவையில்லை. இரகசியம் பேணாது  ஓபிணாக (வெளிப்படையாக)  கதைத்திருந்தால்  பகிரங்க  கேள்வி அறிவித்தல் விடுத்திருக்க முடியும்.

அதன் மூலம் சில வேளை அதிக பணம் கொடுத்து வேறு யாராவது அதனை அமைத்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com