ஓடி ஒழித்த மாகணசபை உறுப்பினர்கள் !! – சிங்களக் குடியேற்றங்கள் குறித்த விசேட அமர்வில் சம்பவம்

தமிழர்களது உரிமைகள் தொடர்பிலும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பிலும் தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்கிவந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் பலர் முல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் இன்று (05) நடைபெற்ற விஷேட அமர்வில் தேநீர் இடைவேளையின் பின்னர் மாயமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது.

சபையில் உறுப்பினர்கள் பலரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை எதிர்த்து கருத்து தெரிவித்தனர்.

முன்னதாக காலை வடமாகாண முதலமைச்சர் காணி அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் தொடர்பில் உரையாற்றினார். அதன் பின்னர் பலஉறுப்பினர்கள் அவைத்தலைவரிடம் எழுத்து மூலம் அனுமதி கோரி உரையாற்றினர்கள்.

பின்னர் சபை மதியம் 11.30 மணியளவில் தேநீர் இடைவேளைக்கு ஒத்திவைத்து மீள சபை ஆரம்பிக்கும் போது , முதலமைச்சர், சிங்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட 17 உறுப்பினர்கள் மாயமாகி இருந்தனர்.

தொடர்ந்து சபையில் ஏனைய உறுப்பினர்கள் உரையாற்றும் போது உறுப்பினர்கள் ஒருவராக மாயமாக தொடங்கினார்கள். இறதியில் சபை 2 மணியளவில் ஒத்திவைக்கப்படும் போது சபையில் 15 உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com