ஒலிவாங்கி பழுதானதால் தப்பித்தார் ரவி கருணாநாயக்க !

parliamentபாராளுமன்றத்தின் ஒலிவாங்கித் தொகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பாராளுமன்றம் நாளை (09) வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றைய தினம் (08) இடம்பெறவிருந்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஆகியன ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியால், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில், ஒலிவாங்கித் தொகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு சில நிமிடங்களுக்கு அவையை ஒத்திவைப்பதாக, சபாநாயகர் அறிவித்திருந்தார்.

பின்னர், அதனை சரி செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சரி செய்ய முடியாமல் போனமையால், பாராளுமன்றத்தை நாளை (09) வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com