ஒற்றை ஆட்சியின் கீழ் 13வது திருத்தச் சட்டத்திற்கு உட்பட்டே தீர்வு – ஐ.ம.சு.கூ தேர்தல் விஞ்ஞாபனம்

ஒற்றை ஆட்சியின் கீழ் சகல இன மக்களினதும் உரிமைகளையும் காக்கும் வகையில் இனப் பிரச்சினைக்கு தீர்வுபெற்றுக் கொடுக்கப்படுமென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று கொழும்பில் வெளியிடப்பட்டது.

இதன்படி, அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லாத வகையில் அதிகாரங்கள் வழங்கப்பட்டு, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளை பலப்படுத்தக்கூடிய தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள், இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் ஆறு மாதங்களுக்குள் தீர்வு முன்வைக்கப்படுமென்றும் அந்த தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவடுத்துவதற்காக தேசிய நல்லிணக்க ஆணைக் குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என இன்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நல்லிணக்க ஆணைக் குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றப்படுமென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட திறைசேரி பத்திர விற்பனை தொடர்பில் முறையான விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்கப்படுமென்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பேசிய முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.
அத்தோடு, 20ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும் தகவல் அறியும் சுதந்திரத்தை பாதுகாப்போம் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com