ஒற்றையாட்சியின் கீழேயே அதிகாரப் பகிர்வுக்கும் இடம்

ஒற்­றை­யாட்­சியைப் பாது­காக்­கும் வகை­யி­லேயே அதி­கா­ரப்பகிர்வு வழங்கப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. புதிய அர­ச­மைப்பின் ஊடாக பௌத்த மதத்துக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­ப­டும் என்­றும் அவர் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கி­றார்.

முன்னாள் அரச தலைவர் ரணசிங்க பிரேமதாசவின் நினைவுதினமான நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு ரணில் உரையாற்றினார்.

”புதிய அரசமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை அடுத்து வரும் இரண்டு மூன்று மாதங்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். தற்போதைய சூழலில் பல விடயங்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இன்னும் மதத் தலைவர்களுடனும், பொது மக்களுடனும் கலந்துரையாட வேண்டியுள்ளது. அனைத்துத் தரப்பினருடைய பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அரசமைப்புக் கொண்டு வரப்படும்.

நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தாது ஒற்றையாட்சியை பாதுகாக்கும் வகையில் அதிகாரப் பகிர்வை வழங்கவேண்டும். ஒற்றையாட்சியின் அடிப்படையில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டு நாட்டை எவ்வாறு முன்நோக்கிக் கொண்டு செல்வது என்று மாகாண முதலமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.

புதிய அரசமைப்பின் ஊடாக ஜனநாயகம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதுடன், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் – – என்றார்.

ஒற்றையாட்சியின் கீழ் எந்தவொரு தீர்வையும் தாம் ஆதரிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் திரும்பத் திரும்பக் கூறிவருகின்றது. அதேபோன்று பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அது தெரிவித்து வருகின்றது. இந்த நிலையிலேயே ரணில் விக்கரமசிங்க இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com