சற்று முன்
Home / செய்திகள் / ஒற்றையாட்சிக்கு இணங்கிய தமிழரசு மகிந்தவுடன் இரகசிய ஒப்பந்தம் – ஐ.தே.க ஆவணம் அம்பலப்படுத்தியது !!

ஒற்றையாட்சிக்கு இணங்கிய தமிழரசு மகிந்தவுடன் இரகசிய ஒப்பந்தம் – ஐ.தே.க ஆவணம் அம்பலப்படுத்தியது !!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது ஒற்றையாட்சி அடிப்படையிலான தீர்வுக்கு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஏற்கனவே ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளதாகவும் அது தொடர்பான விடயத்தை ஐக்கியதேசியக் கட்சியானது 2013 ஆம் ஆண்டு வெ ளியிட்ட பிரேரணை ஒன்றில் வெளிப்படுத்தியிஎருந்ததாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர சபை முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளையும் நிராகரிக்கவேண்டும் எனவும் இவ் உள்ளூராட்சித் தேர்தலில் ஒற்றையாட்சியை நிராகரிக்கின்ற ஆணையாக தமக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது

ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படுவதுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இலக்கு என அக் கட்சியின் தலைவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இவ் உடன்படிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்கள் இடைக்கால தன்னாட்சி அதிகார வரைபை முன்மொழிந்திருந்தார்கள்.அதன் அடிப்படையில் ஒரு தீர்வை நோக்கி பயணிக்கவேண்டும் என்ற நிலையிலேயே அவர்களது நிலைப்பாடு இருந்தது.

இவ்வாறான நிலையில் அவ் ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையிலேயே தீர்வு என்று கூட்டமைப்பானது தெரிவித்திருக்கின்ற நிலையில் உண்மையில் கூட்டமைப்பானது ஒற்றை ஆட்சிக்கு இனங்கி விட்டது என்பது எமது நிலைப்பாடு அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றது.

2013 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம்திகதி ஐக்கிய தேசியக்கட்சியானது பிரேரணை ஒன்றை வெ ளியிட்டிருந்தது. அதில் தாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுகின்ற பட்சத்தில் ஆறு மாதங்களுக்கிடையில் இடைக்கால தீர்வுத் திட்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கமைவாகவே தற்போது இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கையிலே அதிகாரப் பரவல் தொடர்பான விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.அதில் இலங்கை அரசானது ஒற்றையாட்சி அரசாராகவே தொடர்ந்தும் இருக்கும் அதில் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட பத்திரிரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு ஒற்றையாட்சி அடிப்படையிலான ஒரு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது2013இற்கு முன்னரே மகிந்த ராஜ பக்ஷவின் காலத்தில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் தாம் ஒற்றையாட்சிக்கு இனங்கிவிட்டதாக கடிதங்கள் மூலம் தெரிவித்திருக்கின்ற விடயம் வெளிப்படையாகியுள்ளது.

2013 .05.31 ஆம் திகதி வெளியான ஆங்கில நாளேடு ஒன்றில் சுமந்திரன் அந்த ஒற்றையாட்சிக்கு இனங்கிவிட்டதாக மாவை சேனாதிராசா தெரிவித்ததாக அவ் நாளோடு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஒற்றையாட்சி அரசாங்கத்தை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக அப்போதைய அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது தற்போது வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கையிலும் ஒற்றையாட்சிக்கு இனங்குவதாகவும் தெரிவித்துள்ளது.இவ்வாறான நிலையில் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக ஒற்றையாட்சி என் பதத்தை வெளிப்படையாக பிரயோகிக்காமல் ஒன்று பட்ட இலங்கைக்குள் என்ற தமிழ்ச் சொல்லை பிரயோகித்து வருகின்றது.

இத் தேர்தலிலும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்ட ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையில்தான் தீர்வு காணப்படும் என செய்திகளை பரப்பி வருகின்றது.

இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் நாம் பகிரங்கமாக ஒரு விடயத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.அதாவது அன்றைய காலத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பரிமாறிக்கொண்ட பத்திரங்களை தமிழ் மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தவேண்டும்.அந்தவகையில் மக்கள் இத்தேர்தலில் தம்மை ஏமாற்றுகின்ற தலைவர்களை நிராகரிக்கின்ற வகையிலும் இவ் ஒற்றையாட்சியை நிராகரிக்கின்ற நிலையிலும் செயற்படவேண்டும் என்றார்.

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com