சற்று முன்
Home / செய்திகள் / “ஒரு பௌத்த குடும்பம் வாழ்ந்தாலும் அது பௌத்த கிராமமே” – வர்த்தமானி வெளியிட விபரம் சேகரிக்கிறது சிங்கள அரசு

“ஒரு பௌத்த குடும்பம் வாழ்ந்தாலும் அது பௌத்த கிராமமே” – வர்த்தமானி வெளியிட விபரம் சேகரிக்கிறது சிங்கள அரசு

ஒரு பௌத்த குடும்பம் வாழ்ந்தாலும் அந்த கிராமத்தை பௌத்த கிராமமாக அறிவி த்து வா்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் அனைத்து மாவட்ட செயலகங்களிற்கும் அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட மாவட்டங்களில் எந்தவொரு கிராமத்திலும் பௌத்த சின்ன ங்களோ அல்லது பௌத்த மதத்தவர்களோ வாழ்ந்தால் அக் கிராம சேவகர் பிரிவு பௌத்த கிராமங்களாக கருதப்படும். அதன் பிரகாரம் மாவட்டந்தோறும் காணப்படும் பௌத்த சின்னங்கள் , பௌத்த குடும்பங்கள் வசிக்கும் கிராமங்களின் விபரங்களை அனுப்பி வைக்குமாறு மாவட்டச் செயலாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.

போரிற்குப் பின்னர் வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் தாயகம் திரும்ப முடியாது தமிழ் நாட்டு அகதி முகாம்களில் வாடும் அதே நேரம் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்படது அபகரிந்துள்ள நிலங்களில் பௌத்த சின்னங்கள் இரவோடு இரவாக முளைத்தும் வருகின்றன.

இதேநேரம் படையினர் மற்றும் தெற்கிலிற்காக வருகை தந்துள்ளவர்கள் தமது வழிபாட்டிற்கு என்னும் பெயரிலும் பௌத்த சின்னங்கள் ஆங்காங்கே முளைத்தன. இந்த நிலையில் தற்போது ஒரு பௌத்த சின்னம் கானப்பட்டாலும் அது பௌத்த கிராமம் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கூறுவது தமிழ் மக்களை மீண்டும் பாதிப்படையச் செய்யும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கின் மேலும் பல கிராமங்கள் விழுங்கப்படுவதோடு ஏனைய மாகாணங்களிலும் இதே சூழல். ஏற்படும் என அஞ்சப்படுகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com