ஒரு நாள் வாக்களித்துவிட்டு ஐந்து வருடம் தொல்லை செய்யாதீர்

ஒரு நாள் வாக்களித்து விட்டு எம்மை ஐந்து வருடம் பேசாதீர்கள் என வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற முன்னாள் போராளிகள் குடும்பங்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மாகாணசபை ஒன்றும் செய்யவில்லை எனக் கூறுகிறீர்கள். ஆனால் அப்படியல்ல. நிதி திரும்பிப் போவதாக கூறப்படுவது கூட அப்படியல்ல. 98 வீதமான நிதிகள் செலவு செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு வீதிகளாக இருக்கட்டும், வைத்தியசாலைகளாக இருக்கட்டும், அம்புலன்ஸ் சேவையாக இருக்கட்டும் பல விடயங்கள் செய்யப்பட்டுள்ளன. எங்களது காலம் இன்னும் ஒரு வருடங்கள் இருக்கிறது.

ஒரு நாள் வாக்களித்து விட்டு எங்களை ஐந்து வருடம் பேசாதீர்கள். உங்களுடைய பிரச்சனைகளை பூர்த்தி செய்ய தான் எங்களை நீங்கள் தெரிவு செய்தீர்கள். ஆகவே நீங்கள் எங்களைப் பயன்படுத்தவேண்டும் எனத் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com