”ஒருவருசமாவது ஈபிடிபிக்கு கொடுக்க வேண்டும்” – பதவியேற்ற மறுகணமே சுமந்திரனிடம் வாங்கிக்கட்டிய பருத்தித்துறை தவிசாளர் !

பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டவுடன் அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் கைலாகு கொடுக்க ஓடிச் சென்ற ஜோசப் இருதயராசா “ஈபிடிபிக் காரங்கள் குறைச்சது கடைசி ஒருவருசத்தையாவது தந்தே ஆகவேண்டும் எனக் கேட்கிறார்கள் என சுமந்திரனிடம் தெரிவிக்க அதனை நாங்கள் டீல்பண்ணிக்கொள்கிறோம் நீங்கள் பப்பிளிக்கில் இப்படியா கதைப்பது” என கடிந்துகெண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றது.

தமிழ்த் துசிய மக்கள் முன்னணி பலம்பெற்றிருந்த பருத்தித்துறை நகரசபையை சுமந்திரனின் ஆதரவாளருக்கு கைமாற்றுவதற்கு ஒத்துளைத்த ஈபிடிபியின் இரு உறுப்பினர்களில் ஒருவருக்கு பருத்தித்துறை நகரசபையின் இறுதி ஒரு வருடத்தை ஆட்சிசெய்யும் அதிகாரத்தை வழங்கவேண்டும் என இணக்கம் காணப்பட்டுள்ள தகவல் அம்பலமாகியுள்ளது.

பருத்தித்துறை நகரசபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வசம் உறுப்பினர்கள் இருந்தனர் தமித் தேசியக் கூட்டமைப்பின் 05 உறுப்பினர்களும் ஈபிடிபியின் 02 உறுப்பினர்களும் இணைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தோற்கடித்து பரித்தித்துறை நகரசபையினைக் கைப்பற்றியிருந்தது. பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக ஜோசப் இருதயராசா தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com