ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மக்கள் கருத்துக்களிற்கும் சந்தர்ப்பம் வழங்க கோரிக்கை

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தனியே அரசியல் பேசுவதற்கான களமாக மட்டுமே இருக்கிறது. என குற்றஞ்சாட்டியிருக்கும் மக்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மக்கள் தங்கள் பிரச்சினைகளை பேசுவதற்கும், மக்களுடைய பிரச்சினைகளை அரசியல்வாதிகள் பேசுவதற்குமான களமாக இருப்பதில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (30) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மக்கள் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக மக்கள் மேலும் குறிப்பிடுகையில், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு யாழ்.மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் முழுமையாக வருவதில்லை. இன்றைய தினம் கூட இணை தலைவர்கள் வருகைதரவில்லை.

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு யாழ்.மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் விவசாய, கடற்றொழிலாளர் அமைப்புக்கள் என பல அமைப்புக்கள் கலந்து கொள்கின்றன. அவர்களுக்கு கூட்டத்தில் பேசுவதற்கான அனுமதி தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றது. குறிப்பாக மக்கள் தங்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு எழுந்தால் கூட உட்காருங்கள் பின்னர் பேசலாம் என கூறி இணை தலைவர்களான நா டாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை உட்கார வைக்கிறார்கள்.

ஒவ்வொருமுறை கூட்டத்தின் போதும் நிகழ்ச்சி நிரலில் பின்னால் உள்ள விடயங்கள் பேசப்படாத நிலையில் கூட்டம் நிறைவுறுத்தப்படுகின்றது. என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேவேளை மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டைபோலவே ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இணை தலைவர்களின் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மக்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், கூட்டத்தில் பேச விரும்பும் மக்கள் மாவட்ட செயலருக்கு முன் கூட்டியே தகவல் வழங்கி அவர்கள் சபையில் பேசுவதற்கு இடமளிக்கும் வகையிலான ஒழுங்கு ஒன்று செய்யப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com