ஒபாமா முதல்முறையாக அமெரிக்க பள்ளிவாசலுக்கு விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவி ஏற்றது தொடக்கம் முதல் முறையாக நேற்று (03) அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு விஜயம் செய்துள்ளார்.
மரிலான்டில் இருக்கும் பல்டிமோர் பள்ளிவாசலுக்கு நேற்று காலை சென்ற அமெரிக்க அதிபர் அங்கு உரையொன்றினையும் ஆற்றியுள்ளார். எனினும் கடந்த 07 ஆண்டு பதவிக் காலத்தில் ஒபாமா வெ ளிநாட்டுப் பயணங்களில் அங்குள்ள பல பள்ளிவாசல்களுக்கு விஜயம் செய்த நிகழ்வுகள் பல பதிவாகியுள்ளன.

ஒபாமாவின் இந்த விஜயம் மத சுதந்திரத்தினை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கும் என்றும் மத வெறியர்களுக்கு எதிரானதாக இருக்குமென்றும் வௌ்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

அங்கு மக்கள் முன்னிலையில் உரையாற்றிய ஒபாமா, “முஸ்லி்ம் விரோத சொல்லாட்சிக்கு எங்கள் நாட்டில் இடமில்லை”. அத்துடன் அமெரிக்காவில் வாழும் அமெரிக்க முஸ்லிம்கள் மிகவும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள், அவர்களைப் போன்ற மனிதர்களை நீங்கள் வாழ்நாளில் சந்தித்திருக்க மாட்டீர்கள் எனவும் பாராட்டிப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com