ஒன்றரை மணித்தியாலத்துக்கு ஐந்து இலட்சம் !! கைதடி கட்டடத்தில் நடக்கும் கூத்து

வடக்கு மாகாணசபையில் ஒரு நாள் அமர்விற்கான செலவு 5 இலட்சம் ரூபா என கூறப்படுகின்றது. பெரும்பாலும் வடக்கு மாகாசபையில் தேவையற்ற விடையங்களிற்காக நேரத்தை வீணடித்து உறுப்பினர்கள் வீண் விவாதம் நடத்துவதாக மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வந்திருக்கின்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 98 ஆவது அமர்வு முற்பகல் 9.45 இற்கு ஆரம்பமாகியது. அரை மணித்தியாலங்களின் பின் 10.15 இற்கு சபை நடவடிக்கைகளை முடிவுறுத்துவதாக அவைத்தலைவர் அறிவித்தார். அதன் பின் 45 நிமிடங்களாக 21 ஆம் திகதிய அமர்வு குறித்து உறுப்பினர்கள் தங்களுக்கு ள் விவாதம் நடாத்திவிட்டு 11 மணிக்கு தேனீர் அருந்துவதற்காக எழுந்து சென்றனர். அத்தோடு சபை நடவடிக்கைகள் முடிவிற்கு வந்துள்ளது. முக்கிய விடையங்கள் எதுவும் விசாதிக்கப்படாமல் அவை நடவடிக்கைகள் ஒன்ரை மணித்தியாலத்தில் முடிவுறுத்தப்பட்டபோதும் குறித்த 5 இலட்சம் ரூபா நிதி வீண்விரயமாக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com