ஐ.நா. வரைவுத் தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு

(25.09.2015) இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வரைவுத் தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் அமைக்கப்படவிருக்கும் நீதிப் பொறிமுறையில் வெளிநாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள், புலனாய்வாளர்கள், வழக்கறிஞர்கள் இடம்பெற வேண்டும் என இந்த வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதை வரவேற்பதாக கூறியுள்ளது.

இலங்கையில் நீதிக்குக் கிடைத்த மிக முக்கியமான வெற்றி இது என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இம்மாதிரியான ஒரு நீதிமன்றத்தை உருவாக்குவதிலும் அதன் செயல்பட வைப்பதிலும் அரசுக்கும் சர்வதேசப் பங்காளிகளுக்கும் உதவப் போவதாக கூட்டமைப்பு கூறியுள்ளது.
இந்த வரைவு அறிக்கைக்கு சம்மதம் அளித்து, மனித உரிமைப் பேரவையில் இணைந்து பிரேரித்துள்ள இலங்கை அரசுக்கும் கூட்டமைப்பு பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளது.
இந்த ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக தீர்மானத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழியானது பாதிக்கப்பட்ட சிலருக்கு உவப்பானதாக இருக்காது என்பதைத் தாங்கள் உணர்ந்திருப்பதாகவும் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இருந்தபோதும், நல்லிணக்கத்தை நோக்கிய நீண்ட பாதையில் இந்த வரைவுத் தீர்மானம் ஒரு துவக்கப்புள்ளியாக அமையும் என தாங்கள் நம்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com