ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகள் இன்றுடன் நிறைவு

ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பமான கூட்டத்தொடர் நான்கு வாரங்கள் நடைபெற்றன. இதில் இலங்கை தொடர்பான இரண்டு முக்கிய விவாதங்கள் கடந்த திங்கட்கிழமையும் புதன்கிழமையும் இடம்பெற்றதுடன் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் தமது விஜயம் பற்றிய அறிக்கைகளையும் வெளியிட்டனர்.

மனித உரிமைக்கும் பயங்கரவாதத்திற்கும் எதிரான விடயத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய,பேன் இமேசன் என்பவரது இலங்கை விஜயத்தின் அறிக்கையை இப்பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பினனாலுலா நீஅலோ என்பவர் வெளியிட்டார்.

அதனை அடுத்து, இலங்கைக்கு பலதடவை விஜயம் செய்துள்ள பாவுலே டி கீறீவ் தனது அறிக்கையை வெளியிட்டார். இவர் இறுதியாக கடந்த நவம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இவர் மாறுபட்ட நீதி எனும் பொருள்படும் விடயங்களுக்கு பொறுப்பாக கடமையாற்றுபவர். இது தவிர பக்க அறைகளில் இலங்கை தொடர்பாக 25 க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற்றன. ஐ.நா மனித உரிமை பேரவையின் 38 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகி ஜுலை 6ஆம் திகதி நிறைவடையும்.

இக்கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை முன்னேற்றங்கள் நிலைமாறு காலநிதி தொடர்பாக ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்கள் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com