ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் யாழ் விஜயம் (படங்கள்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் யாழ்ப்பணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் இன்று காலை யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சரை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , இடம்பெயர்ந்தவர்கள் , மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியவர்களின் ஐந்து பிரதிநிதிகளை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

முதலமைச்சருடனான சந்திப்பை தொடர்ந்து வடமாகாண ஆளுனர் எச் .எம்.ஜீ. எஸ். பலிஹக்கார அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து நல்லூர் ஆலயத்திற்கு சென்று ஆலய வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் , வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரிமுகாமில் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com