ஐ.நா தீர்மானனத்தை வரவேற்கிறோம் – தமிழரசுக் கட்சி

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை வரவேற்பதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34/1 என்ற தீர்மானத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.

2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுமாறு இந்த புதிய தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் தீர்மானத்தின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென்ற நிபந்தனை வரவேற்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளது.

2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ள முறையே 37 மற்றும் 40ம் அமர்வுகளில் இந்த தீர்மானம் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு அளித்த வாக்குறுதியை அரசாங்கம் முழு அளவில் அமுல்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

காணிகளை விடுவித்தல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் போனவர்களின் உறவுகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், அரசியல் சாசனத் திருத்தங்களை அமுல்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் உரிய முனைப்பு காட்ட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
தமிழ் மக்கள் தங்களது பொறுமையின் எல்லையை கடந்து விட்டதாகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளது.

நல்லிணக்க முனைப்புக்கள் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் உள்ளிட்ட விடயங்கள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறித்து தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உன்னிப்பாக கண்காணிக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் சர்வதேச சமூகம் ஆகியன ஐ.நா தீர்மானம் அமுல்படுத்தப்படுவதனை உறுதி செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com