சற்று முன்
Home / பிரதான செய்திகள் / ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாயின் நாட்டில் பொது வாக்கெடுப்பு வேண்டும் – விமல்

ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாயின் நாட்டில் பொது வாக்கெடுப்பு வேண்டும் – விமல்

(பதிவு செய்த நாள் – புரட்டாதி 29, 2015, 09.32 பி.ப) ஐ.நா. மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்பாக பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு உள்நாட்டு கட்டமைப்பொன்றை உருவாக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளது பொய் என்றும் அவர் கூறினார்.
உண்மையில், சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவொன்றின் மூலமே சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படவுள்ளதாக விமல் வீரவன்ச கூறினார்.
இந்த விசாரணை இலங்கை அரசியல்சாஸனத்தை மீறும் ஒரு செயலென்று கூறிய விமல் வீரவன்ச, ஐ.நா. மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்னர் இது குறித்து, மக்களின் அனுமதியை பெறுவதற்கு பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்படுவது அவசியமென்று கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ குணவர்த்தன, அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் மூலம் இலங்கையின் சுதந்திரம் பறிக்கப்படுமென்று குற்றம்சாட்டினார்.
இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும் தினேஷ குணவர்த்தன தெரிவித்தார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com