சற்று முன்
Home / செய்திகள் / ஐ.நா தலைமையகத்தையும் விட்டுவைக்காத கொரோனா

ஐ.நா தலைமையகத்தையும் விட்டுவைக்காத கொரோனா

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் கண்டறிப்பட்டுள்ளது.

ஐ.நாவிற்கான பிலிப்பைன்ஸின் நிரந்தர தூதுவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“இன்று முன்னதாகஇ பிலிப்பைன்ஸின் நிரந்தர தூதுவர் வைத்திய சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சாதகமாக பதில் கிடைத்துள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பிரதிநிதி நேற்று முன்தினம் ஐ.நா. தலைமையகத்தில் சுமார் 30 நிமிடங்கள் நள்ளிரவில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றார்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பிரதிநிதிக்கு ஐ.நா ஊழியர்களுடன் தொடர்பு இல்லை, என்றாலும் மற்றொரு பிரிவைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளைச் அவர் சந்தித்தார். ” எனவும் ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. நிறுவப்பட்ட 75 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை விசேட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலும் தீவிரம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவ துவங்கியுள்ளது. தினமும் 100 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 1,135 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சோதனை கருவி தட்டுப்பாடு

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ‘அமெரிக்காவின் சுகாதாரத் துறை ஆய்வகங்களுக்கு மிகக் குறைந்த அளவில் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பரிசோதனைக்குத் தேவையான மருத்துவ கருவிகள் மற்றும் இயந்திரங்கள் நம்மிடம் போதிய அளவில் இல்லை. கையுறைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது’ என, வெளிப்படையாக விவாதித்தனர்.

அமெரிக்காவுக்கு 10 லட்சம் கொரோனா வைரஸ் சோதனை கருவிகளின் தேவை உள்ளது. அவற்றை ஒரு வாரத்திற்குள் தருமாறு கடந்த 6ம் தேதி சுகாதாரத் துறை கேட்டுள்ளது. ஆனால், ஒரு வாரத்துக்குள் தயாரிக்க இயலாத நிலையில் அமெரிக்க உள்ளது’ என, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்திருந்தார்.

தொடரும் தடுமாற்றம்

இந்நிலையில் நேற்று (12ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்த மைக் பென்சிடம், ‘இதுவரை எவ்வளவு அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது’ எனக்கேள்வி எழுப்பப்பட்டது. ‘இதற்கான பதில் என்னிடம் இல்லை. தரவுகள் குறித்து நிபுணர்களிடம் தான் கேட்க வேண்டும்’ என, மைக் பென்ஸ் உண்மை நிலவரத்தை மறைக்கும்படி, பதிலளித்தார்.

அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையங்கள் அளித்த தரவுகளின்படி, ‘இதுவரை அமெரிக்காவில், 11,079 பேரின் ரத்த மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளன’ என, அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சில அதிகாரிகள், ‘பலரும் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதித்துள்ளனர். இதனால் எவ்வளவு பேருக்குப் பரிசோதிக்கப்பட்டுள்ளது’ என்ற தரவுகளைத் தெளிவாகக் கூறமுடியாது’ எனக் கூறுகின்றனர்.

இப்படி, இருவேறு கருத்துகள் நிலவினாலும், அமெரிக்காவில் ஒரு நாளைக்கு, 1,000 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பதை அரசு தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது.

தென் கொரியா ‘அலர்ட்’

அமெரிக்காவுக்கு நேர்மாறாக, தென் கொரியாவில் ஒரு நாளைக்கு, 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை, 2.10 லட்சம் பேருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறிய நாடாகவுள்ள தென் கொரியா, கொரோனா வைரஸ் விஷயத்தில் தீவிரமாகச் செயல்படுகிறது. ஆனால், அமெரிக்க அரசு தடுமாற்றத்துடனும் மெத்தனமாகவும் இருப்பது, அரசின் மீது அம்மக்களுக்கு அவநம்பிக்கையையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com