ஐ.நா ஆணையாளர் அடுத்த மாதம் இலங்கை வருகை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் (Zeid Ra’ad Al Hussein) எதிர்வரும் பெப்ரவரி மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு விடுத்த அழைப்பிற்கு ஏற்ப, அல் ஹூசெய்ன் இலங்கைக்கு வரவுள்ளார். நாட்டுக்கு வருகை தரவுள்ள அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உள்ளிட்ட முக்கிய ஆளும் கட்சி பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்புக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  இதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com