ஐ.நாவில் ஆபத்தில்லை – இலங்கை அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 34 வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களும் இருக்காது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் கடந்தகால கூட்டத் தொடர்களில் இலங்கை சம்பந்தமாக யோசனைகள் முன்வைக்கப்படுவது, மனித உரிமைகள் பற்றி கலந்துரையாடுவது போன்றன நடந்திருந்தாலும் இம்முறை அவ்வாறான எதுவும் நடக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அனுசரணையுடன் 2015 ஆமு் ஆண்டு நிறைவேற்றப்பட்ட யோசனையில் அடங்கிய பரிந்துரைகளை செயற்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்னேற்ற அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் பேர வையில் முன்வைக்கப்பட உள்ளது.
இதனை தவிர வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை சார்பில் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 34 வது பேரவைக் கூட்டம் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹூசைன் தலைமையில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com