ஐ.நாவின் புதிய தலைமைச்செயலராக “அண்டோனியோ குட்டரஸ்” தெரிவு

_91549216_fbe35eb8-9c7d-4573-b32d-13663f89f4e7ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த தலைமைச் செயலர் பதவிக்கு போர்ச்சுகலின் முன்னாள் பிரதமர் அண்டோனியோ குட்டரஸை அதன் பாதுகாப்பு கவுன்சில் முறைப்படி நியமித்துள்ளது.
ஐ நா தலைமைச் செயலராக தேர்தெடுக்கப்படவுள்ளார் அண்டோனியோ குட்டரஸ்
அவர் ஏற்கனவே ஐ நாவின் அகதிகள் நல ஆணையத்தின் தலைவராக பத்தாண்டுகள் பணியாற்றியவர் மற்றும் அனுபவம் வாய்ந்த ராஜதந்திரி.
ஐ நா பாதுகாப்பு கவுன்சிலிலுள்ள அனைத்து நிரந்தர உறுப்பினர்களும் அவருக்கு புதன்கிழமை ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து பான் கீ மூனுக்கு பிறகு குட்டரஸ் ஐ நா தலைமைச் செயலராவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அவரது நியமனம் இப்போது ஐ நா பொதுசபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
ஐ நா தலைமைச் செயலர் பதவிக்கு அண்டோனியோ குட்டரஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மிகச் சிறந்த தேர்வாகும் என பதவி விலகிச் செல்லவுள்ள பான் கீ மூன் கூறியுள்ளார்.
அவர் அடுத்த ஆண்டு ஜனவரியில் பதவியேற்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com