சற்று முன்
Home / செய்திகள் / ஐ.நாவின் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்ப ரணில் கோரினார் என்கிறார் வாசுதேவ

ஐ.நாவின் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்ப ரணில் கோரினார் என்கிறார் வாசுதேவ

புதிய அரசாங்கத்தை வீழ்த்துவதற்​காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நாவின் அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, ஐ.நா அமைதிகாக்கும் படையினர், இலங்கை இராணுவத்தை வீழ்த்திவிட்டே அரசாங்தை வீழ்த்த முடியும் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று(30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், தாம் அரசமைப்புக்குற்பட்டே செயற்படுவதாகவும், அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளினாலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த டளஸ் அழகப்பெரும எம்.பி, தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்ததின்போது ஏற்பட்டிருந்த அசாதாரண நிலைமைகளிலும் கூட நாம் ஒருபோதும், ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் உதவியை கோரியிருக்கவில்லை எனவும், ஆனால், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஐ.நா அ​மைதிகாக்கும் படையினரின் ஒத்துழைப்பு வேண்டும் எனக் கோரியிருப்பது தேசத்துரோகம் எனவும் தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது, 9 மாகாண சபைகளில் 6 மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளன. இரண்டரை வருடங்களுக்கு மேலாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாதிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களமும் இது தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

அமெரிக்கா பிரஜையான ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி சௌதி அரசாங்கத்தினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது வார்த்தைகளில் கவனம் செலுத்திய அமெரிக்கா, தற்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஜனநாயகம் தொடர்பில் சான்றிதழ் வழங்க முயற்சிக்கிறது எனவும் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாடு சார்பு கொள்கைகளினாலேயே அவரை பாதுகாக்க அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றதாக குறிப்பிட்ட அவர், இலங்கை வரலாற்றில் இதுவரையில் 24 தடவைகள் நாடாளுமன்றம் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 24 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இருப்பதாகவும், ஆகவே தற்போது நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது முதன்​முறையல்ல எனவும் எடுத்துரைத்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com