சற்று முன்
Home / செய்திகள் / ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய குழு..

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய குழு..

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்ய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணிலின் அறிவுறுத்தலின் பெயரில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் அமைச்சர்கள் ராஜித சேனரத்ன, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாஷிம், மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதமரின் ஆலோசகர் தினேஷ் வீரக்கொடி ஆகியோரே இந்த குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.

ரணில் விக்ரமசிங்கவுக்கும், துணைத் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கடந்த வாரம் நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த குழு நியமிக்கப்பட்டது.

நேற்று கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது, இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தவுடன் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com