ஐ.எஸ் தாக்குதலை எதிர்கொள்ள தயார்!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளக் கூடியவாறு தயார் நிலையில் உள்ளதாக புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை க்கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
“இலங்கைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை. சிலர் தமது நலனுக்காக இவ்வாறான வதந்திகளைப் பரப்பக்கூடும்.எனினும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுமெனில் அதனை எதிர்கொள்ள இலங்கையின் முப்படையினரும் ,பொலிஸாரும் தயாரான நிலையில் உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com