ஐ.எஸ் எனச் சந்தேகம் – கட்டுநாயக்கா வந்த குடும்பம் ஒன்று திருப்பி அனுப்பப்பட்டது

170864204Airஇன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய குடும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Air-Arabia G9501 விமானத்தில் கட்டுனாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய், தந்தை மற்றும் சிறிய பிள்ளை ஒன்றும் போலி கடவூச்சீட்டு மூலம் வருகை தந்துள்ளதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஆர்.டீ.எஸ் குணரட்ணவிற்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அவர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி தாய் மற்றும் பிள்ளைக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் போலி கடவூச்சீட்டு இருந்துள்ளதுடன், தந்தைக்கு ஜேர்மன நாட்டு கடவூச்சீட்டு இருந்துள்ளது.

சந்தேகத்தின் காரணமாக அவர்களின் ஆவணங்களை பரிசோதித்த போது, அவர்களிடம் இரண்டு அகதி கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், உதவி கட்டுப்பாட்டாளர் எம்.ஜி.எச் காரியவசம் அத தெரணவிடம் கூறினார்.

இலங்கைக்கு வந்த இவர்கள் எதிர்வரும் 14ம் திகதி நோக்கி செல்ல இருந்ததாகவும், உண்மைத் தகவல்களை மறைத்ததன் காரணமாக அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் அதற்கு ஆதரவானவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்காக சவுதியில் இருப்பது சம்பந்தமான ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதனால் ஆரம்பத் தகவல்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கியதாகவும், இறுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரின் உத்தரவுப்படி அவர்களை நாடு கடத்தியதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com