சற்று முன்
Home / செய்திகள் / ஐந்து கோடி கைமாற்றம் – நிதி குற்றவியல் விசாரணை பிாிவில் றிஷாத்தின் மனைவி முன்னிலை

ஐந்து கோடி கைமாற்றம் – நிதி குற்றவியல் விசாரணை பிாிவில் றிஷாத்தின் மனைவி முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினா் றிஷாட் பதியூதினின் மனைவி கிதொ் மொஹமட் சஹாப்தீன் ஆயிஷாவின் வங்கி கணக்கிலிருந்து 5 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி பாிமாற்றம் செய்யப்பட்டமை தொடா்பாக,

நிதி குற்றவியல் விசாரணை பிாிவு இன்று காலை அவாிடம் தீவிர விசாரணைகளை நடாத்திவருகின்றது. அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஐந்து கோடியே 50 லட்சம் ரூபாய் நிதிபரிமாற்றம் இடம்பெற்றமை தொடர்பாக

இந்த விசாரணை இடம்பெறுவதாக, நிதிமோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்தது. மத்தியவங்கியின் புலனாய்வுப் பிரிவு வழங்கிய முறைப்பாடு ஒன்றுக்கு அமைய இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கொழும்பு 7, பௌத்தலோக மாவத்தையைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு உரிய வங்கி கணக்கிற்கு, தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து ஐந்து கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை வைப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் அவசரம் தமக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க உள்ளிட்டவர்கள்

ஊடகங்கள் வாயிலாக முன்வைத்த அவதூறுகள் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் காவற்துறை திணைக்களத்தில் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

அந்த முறைப்பாடு தொடரில் மேலதிக தகவல்களையும் ஆவணங்களையும் வழங்கும் நோக்கில் ரிஷாத் பதியுதீன் நேற்று காலை திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவுற்கு சென்று வாக்கு மூலம் ஒன்றை வழங்கினார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிஷாத் பதியுதின்,

தம் மீது சுமத்தப்பட்டு வரும் அத்தனை குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை எனவும் காவற்துறைத் திணைக்களம் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான அறிவிப்பு ஒன்றை விடுத்த பின்னரும் அவர்கள் வேண்டுமென்றே

தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவித்து வருவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு கோருகின்ற போதும், தமக்கு அதில் அவசரம் இல்லை என்றும் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com