ஐங்கரநேசன் பனங்காட்டு நரி. – சி.வி.

வடமாகாண விவசாய ஐங்கரநேசன் பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சமாட்டார். சதா மக்கள் நலம் பேணும் வேலைகளிலேயே மூழ்கி நிற்கும் ஒரு அமைச்சர். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
முழங்காவில் பேருந்து நிலைய திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், 
விவசாய அமைச்சர் கௌரவ ஐங்கரநேசன் அவர்கள் விவசாய உற்பத்திகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு அரிய பல திட்டங்களை உருவாக்கி வருகின்றார். 
கனிதரும் மரங்களையே கரவானவர்களின் கற்கள் பதம்பார்க்கும். அதனால் அவருக்கு எதிராகக் கற்கள் வீசப்படுவதை எதிர்பார்க்கத்தான் வேண்டும்.
எனினும் அமைச்சர் ஐங்கரநேசனும் பனங்காட்டு நரி;  சலசலப்புக்கு அஞ்சமாட்டார். சதா மக்கள் நலம் பேணும் வேலைகளிலேயே மூழ்கி நிற்கும் ஒரு அமைச்சர். அவரின் வழிகாட்டலின் கீழ் நீங்கள் அனைவரும் இணைந்து கொண்டு விவசாய உள்ளீடுகளைப் பெருக்கப் பாடுபட வேண்டும். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds