ஏழு புதிய தூதுவர்கள் நியமனக் கடிதங்கள் கையளிப்பு

ஐந்து புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயரிஸ்தானிகர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(22) கையளித்தனர். இந்த நிகழ்வு கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

அவ்வகையில்

திரு. கார்லோஸ் ஈ ஓர்லாண்டோ (Carlos E. Orlando) உருகுவே குடியரசின் தூதுவர்

திரு. பிரகாத் எச். டேர்ட்லி (Parakhat H. Durdyev) துருக்மெனிக்ஸ்தான் குடியரசின் தூதுவர்

திரு. குயுலோ பெத்ஓ (Gyula PethO) ஹங்கேரி நாட்டின் தூதுவர்

திரு. சொசெப் டுரொபெனிக் (Zozef Drofenik) சுலோவேனியா குடியரசின் தூதுவர்

திரு. நியான்கொரோ யே சமேக் (Niankoro Yeah Samake) மாலி குடியரசின் தூதுவர்

திரு. ஜகடிஸ்வர் கொபுர்துன் (Jagdishwar Goburdhun) மொரிசியஸ் நாட்டின் உயரிஸ்தானிகர்

வான் செய்தி பின் வான் அப்துல்லாஹ் (Wan Zaidi Bin Wan Abdullah) மலேசிய நாட்டின் உயரிஸ்தானிகர். இவர்களுக்கான நியமனக் கடிதங்களே ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com