சற்று முன்
Home / செய்திகள் / ஏழு கோடி ரூபா செலவில் வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்

ஏழு கோடி ரூபா செலவில் வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்

வல்வெட்டித்துறையின் சாதனையாளர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக நீச்சல் தடாகம் அமைக்கப்படவுள்ளது. இதற்கென விளையாட்டுத்துறை அமைச்சு ஏழு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று முற்பகல் 9.30 மணியளவில் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. பருத்தித்துறை பிரதேச செயலர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரிஷ் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வடமாகாண முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் மாகாண சபை உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான அகிலதாஸ் சிவக்கொழுந்து மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தவராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com