சற்று முன்
Home / செய்திகள் / ஏறாவூவில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி தீப் பிடித்ததில் மூன்று இளைஞர்கள் உடல் கருகிப் பலி – மூவர் படுகாயம்

ஏறாவூவில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி தீப் பிடித்ததில் மூன்று இளைஞர்கள் உடல் கருகிப் பலி – மூவர் படுகாயம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியில் இன்றிரவு ஏற்பட்ட கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது இரு மோட்டார் சைக்கிள்களும் தீப்பற்றிக்கொண்டன. அதில் சிக்குண்டே மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர்.

அதேவேளை, இந்த அனர்த்தத்தில் சிக்கி மேலும் மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் மூவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com