சற்று முன்
Home / செய்திகள் / எழுதுமட்டுவாழில் கோர விபத்து – ரயிலில் சிக்கி துண்டுதுண்டானது மினிவான் – சாரதி படுகாயம்

எழுதுமட்டுவாழில் கோர விபத்து – ரயிலில் சிக்கி துண்டுதுண்டானது மினிவான் – சாரதி படுகாயம்

ரயில் பாதையைக் கடக்க முற்பட்ட தனியார் பேருந்தை (மினிவான்) தொடருந்து மோதியதில் சேவையில் ஈடுபடச் சென்ற தனியார் பேருந்து முற்றாக சேதமடைந்தது. சம்பவத்தில் சாரதி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாழில் இன்று காலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு பயணித்த அதிவேக சொகுசுத் தொடருந்துடனேயே இந்த விபத்து இடம்பெற்றது.

எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை மினிவான் ஒன்று கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தனியார் பேருந்து சேவையை ஆரம்பிபதற்காக தரிப்பிடத்தை நோக்கி செல்லும் போதே இடம் விபத்து இடம்பெற்றதாகவும் அதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்,போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com