சற்று முன்
Home / செய்திகள் / எழுச்சி கொண்டது யாழ் பல்கலை – நண்பகல் 12.30 இற்கு வணக்க நிகழ்வு – மாலை 06.05 இற்கு சுடரேற்றல்

எழுச்சி கொண்டது யாழ் பல்கலை – நண்பகல் 12.30 இற்கு வணக்க நிகழ்வு – மாலை 06.05 இற்கு சுடரேற்றல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நினைவேந்தல் நினைவுகளுக்காக பல்கலைக்கழகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபி புனரமைக்கப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

நாளை நண்பகல் 12.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவிடத்தில் வணக்க நிகழ்வாக மலரஞ்சலி நிகழ்வும் மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பும் நடைபெறும் என பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து மாலை 06.05 இற்கு மாவீரர் நினைவுநாள் சுடர் ஏற்றப்படும்.

மாவீரர் நாள் நாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்ற அதே வேளையில் பல்வேறு நிழக்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இதே போன்ற மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தயாராகிக் கொண்டிருக்கின்றது. பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுத் தூபி மீளப் புனரமைக்கப்பட்டு புதுப் பொழிவுடன் காட்சியளிக்கின்றது.

இதற்கமைய பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுத் தூபியையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் மஞ்சல் சிவப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு நினைவு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

அத்தோடு மாவீரர் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு நாளைமதியம் பல்கலைக்கழகத்தில் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com