எழுக தமிழ் – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி காலை 9 மணிக்கு முன் அணிதிரள அழைப்பு

090எதிர்வரும் சனிக்கிழமை 24 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு எழுக தமிழ் மக்கள் பேரணி நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்றலிருந்தும் யாழ் பல்கலைக்கழக முன்றளிலிருந்தும் ஆரம்பமாகி யாழ் முற்றவெளியை சென்றடைய இருக்கின்றது. முற்றவெளியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும்,தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களும் உரையாற்றுவதுடன் முக்கியமான பிரகடனங்களும் மேற்கொள்ளப்படும்.
யாழ்ப்பாணம் கச்சேரி முன்றல்,,கல்வியங்காடு என்ற இடங்கள் மாற்றப்பட்டு நல்லூர் மற்றும் யாழ் பல்கலைகழக முன்றலில் இருந்து மாத்திரம் பேரணிகள் புறப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
வடமராட்சி,தென்மராட்சி,வலிகாமத்தின் பலபகுதிகள், தீவகத்திலிருந்தும் மக்கள் இலகுவாக இப்பேரணியில் பங்கு கொள்ளும் பொருட்டு பேரூந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருந்த போதும் தமது சொந்த வாகனங்களில் வரக்கூடியவர்கள் அனைவரும் 9.00 மணிக்கு முன்பாக பேரணி ஆரம்பிக்கும் இடங்களுக்கு வருமாறும் அன்புடன் வேண்டுகின்றோம்.
பேரணியை குழப்பும் பொருட்டு ஒரு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன. பேரணிக்குத் தேவையான அனைத்துப் பணிகளும் சட்டபூர்வமாக செய்யப்பட்டிருக்கின்றன என்பதை மக்களுக்கு அறியத்தருவதுடன் யாழ் மாவட்டத்தின் அனைத்து வர்த்தக சங்கங்களும் தமது வியாபார நிலையங்களைப் பூட்டி எழுக தமிழ் பேரணியில் பங்கு கொள்வதாக அறிவித்துள்ளனர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
அத்துடன் யாழ் மாவட்டத்திலுள்ள தொழிற்சங்கங்களும்,சிவில் அமைப்புக்களும்,பொது அமைப்புக்களும்,பல்கலைக்கழக சமூகமும் மற்றும் கற்றல் கற்பித்தல் சமூகங்களும் பேரணியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள் மேற்குறிப்பிட்ட அனைத்து அமைப்பினரும் எழுக தமிழ் என்ற செற்பதத்துடன் அவர்களது பதாதைகளுடன் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

எழுகதமிழ் ஏற்பாட்டுக்குழு சார்பில்
சுரேஸ் க.பிறேமச்சந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com