எழுக தமிழிற்கு ரெலோ இயக்கமும் பூரண ஆதரவு

teloஎழுக தமிழ் எழுச்சிப் பேரணி 24ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாண நகரில் நிகழ்வுள்ளநிலையில் தமது பரிபூரண ஆதரவை தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்துள்ளது.
தமிழினத்தின் இன்றைய நிலையில் குறுகிய அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற அடிப்படையில் எமது உரிமைக் குரல் ஓங்கி ஒலித்திட வேண்டும் என்பதில் எம்மத்தியில் வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

இந்த யதார்த்தத்தின் அடிப்படையில், அரசியல் நீதி கோரி நிற்கும் எமது மக்களின் உணர்வுபூர்வமான ஆதரவு “எழுக தமிழ்” பேரணிக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அணிதிரண்டு கலந்துகொண்டு தமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுமாறு கட்சியின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் கட்சிகள் ஏற்கனவே தங்கள் முழுமையான ஆதரவினை வெளிப்படுத்தியதோடு தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்குபடுத்தப்படும் கூட்டங்களிலும் கலந்துகொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds