“எளிய” – கோத்­த­பாய ராஜபக் ஷவின் புதிய அமைப்­பு உருவாக்கம்!

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தலை­மையில் “எளிய” (வெளிச்சம்) எனும் புதிய அமைப்­பொன்று நாளை உத­ய­மா­கின்­றது. புதிய அர­சியல் அமைப்பின் சவால்கள் மற்றும் அச்­சு­றுத்தல் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இந்த அமைப்பின் முதல் கூட்டம் நாளை பொர­லஸ்­க­மு­வையில் இடம்­பெ­ற­வுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட பொது எதி­ர­ணியின் பலர் இந்த நிகழ்வில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவின் அர­சியல் பிர­வேசம் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் பரி­மாற்­ற­பட்டு வரும் நிலையில் “எளிய” எனும் பெயரில் அவர் புதிய அமைப்­பொன்றை உரு­வாக்­க­வுள்ளார். கோத்­த­பாய ராஜ­பக்ஷ தலைமை தாங்கும் இந்த அமைப்பில் பல்­வேறு அர­சியல் மற்றும் சிவில் பிர­மு­கர்கள் அங்கம் வகிக்­கின்­றனர்.

இந்த அமைப்பின் முதல் கூட்டம் நாளை 6 ஆம் திகதி பொர­லஸ்­க­முவை பிர­தே­சத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. இது அவ­ரது அடுத்­த­கட்ட நகர்­வா­கவும் அர­சி­யலில் தன்னை இணைத்­துக்­கொள்ளும் ஆரம்ப நகர்­வாகும் அமையும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அத­போன்று சகல இலங்கை பிர­ஜை­க­ளி­னதும் எதிர்­பார்ப்­பு­களை ஒளி­யேற்றும் நோக்­கத்தில் ஏற்­றப்­படும் தீபம் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இந்த அமைப்பின் நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட பொது எதிரணி உறுப்பினர்களும் ஏனைய பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com