எரியும் நெருப்பை அணைத்தார் அமைச்சர் துரைராஜசிங்கம் – பிக்குவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் முறுகல்

img_0272மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தினை பூட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று செவ்வாய்க்கிழமை (15) முன்னெடுக்கப்பட்ட நிலையில்  ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் டயர்களை  எரிக்கமுற்பட்டபோது தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் அவற்றினை தடுத்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலையேற்றபட்டதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஆர்ப்பட்டக்காரர்களுக்கு இடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிக்கு கடந்த காலத்தில் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் அத்துமீறி சென்று பிரதேச செயலாளர் சிவப்பிரியாவை தாக்க முற்பட்டதுடன் பிரதேச செயலகத்தினையும் சேதப்படுத்தியிருந்தார். அதற்கு எதிராகக் கூட இன்றுவரை உரிய நடவடிக்கையெடுக்கப்படாத நிலையில் குறித்த பிரதேச செயலாளரையே இடமாற்றும் நடவடிக்கையெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிக்குவின் இந் நடவடிக்கைகளிற்கு ஒரு முடிவு கட்டப்படவேண்டும்எனக் கூறி வீதியில் ரயர்களைப் போட்டு எரித்தனர்.

அதன்போது அங்கு நின்ற கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்  கி.துரைராஜசிங்கம் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடக்கூடாது எனக் கூறி  பாத்திரங்களில் நீர் எடுத்துவந்து எரிக்கப்பட்ட ரயர்களில் தானே நீரினை ஊற்றி அணைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்போது சம்பவ இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் சிசிர தெத்ததந்திரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
குறித்த பௌத்த பிக்குவிற்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பில் விசாரணைகள் முன்னெடுக்கபடும் என்ற உறுதி மொழியையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன் பிரதேச செயலக நடவடிக்கைகளும் ஆரம்பமானது.img_0268
img_0273 img_0296

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com