எம்மை தூக்கிலிடுங்கள். புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள் கோரிக்கை.விசாரணைகளை துரிதப்படுத்தி எங்களை குற்றவாளிகள் என இனம் கண்டால் எம்மை தூக்கிலிடுங்கள் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேக நபர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு திங்கள் கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போதே சந்தேக நபர்கள் கூட்டாக அவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் நீதிவானிடம் மேலும் தெரிவிக்கையில், 
நாங்கள் அனைவரும் சுற்றவாளிகள் நாம் இந்த கொலையை செய்வில்லை பொலிசார் எம்மை பழிதீர்க்கும் நோக்குடன் தான் இந்த வழக்கில் எம்மை சிக்க வைத்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்று எட்டு மாதங்களை கடந்த நிலையிலும் எமக்கு எதிரான சாட்சியங்களை அறிக்கைகளை பொலிசார் நீதிமன்றில் கையளிக்கவில்லை.
இதனால் நாம் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. வாழ்வாதாரம் இன்றி எமது குடும்பம் வறுமையில் வாழ்கின்றது.
எனவே இந்த வழக்கு விசாரணைகளை துரித கெதியில் முன்னெடுத்து நாம் நிரபராதிகள் என அடையாளம் கண்டு எம்மை விடுதலை செய்யுங்கள் குற்றவாளிகள் என கண்டால் எம்மை தூக்கிலிடுங்கள்.   வழக்கினை இழுதடிக்காதீகள்.
இவ்வாறு தொடர்ந்து வழக்கில் முன்னேற்றம் இல்லாத பட்சத்தில் நாம் உணவு தவிர்ப்பு போராடத்தில் ஈடுப்பட்டு எமது உயிரை விடுவோம் என தெரிவித்தனர்.
அதற்கு பதில் அளித்த நீதவான் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதுவரையில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். எதற்காக இதுவரை உங்கள் சார்பில் சட்டத்தரணிகளை அழைத்து வரவில்லை என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சந்தேக நபர்கள் யாழ் சட்டத்தரணிகள் எவரும் எமக்காக ஆஜாரராக முன்வருகின்றார்கள் அல்ல. நாம் கூலி வேலையினை செய்பவர்கள் , கொழும்பில் இருந்து சட்டத்தரணிகளை கொண்டுவரும் அளவிற்கு எமக்கு பொருளாதார வசதிகள் இல்லை என நீதிபதிக்கு பதிலளித்தனர். 
அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 8 ம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். அதுவரையில் பத்து சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com