எம்பிலிபிடிய சம்பவம் – ஏ.எஸ்.பி உள்ளிட்டோரைக் கைதுசெய்ய உத்தரவு

இரத்தினபுரி உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இருந்த டீ.டப்ளியூ.சி.தர்மரத்ன மற்றும் எம்பிலிபிடிய பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகராக இருந்த எஸ்.ஆர்.ஜே.டளஸ் ஆகியோரை உடனடியாகக் கைதுசெய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு எம்பிலிபிடிய நீதவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 4ம் திகதி இரவு எம்பிலிபிடிய பகுதியில் இடம்பெற்ற விருந்து நிகழ்வொன்றின் போது, பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படு காயமடைந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இவர்களைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைதுசெய்து அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதவான் குறிப்பிட்டுள்ளார் 

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் மேற்குறிப்பிடப்பட்ட உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்னதாக இடமாற்றம் வழக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com