எமது மகன் இராணுவத்தினருடன் நிற்கும் புகைப்படம் பத்திரிகையில் பிரசுரமாகி உள்ளது

காணமால் போன மகன் இராணுவத்தினருடன் நிற்கும் புகைப்படம் பத்திரிகையில் பிரசுரமாகி உள்ளது என தாய் தந்தையர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.
மேலும் தமது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், 
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த எமத மகனான கந்தசாமி சயந்தன் 2008ம் ஆண்டு 8ம் மாதம் 18ம் திகதிக்கும் 20ம் திகதிக்கும் இடைபட்ட கால பகுதியில் உயிலங்குளம் பகுதியில் இராணுவ சுற்றி வளைப்புக்குள் அகப்பட்டு சரணடைந்ததாக இதய வீணை வானொலியில் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் 2008ம் ஆண்டு 10ம் மாதம் 26ம் திகதி பத்திரிகை ஒன்றில் காட்டு பாதையில் இராணுவ வாகனம் ஒன்று புதைந்து உள்ளது அதனை சிலர் இணைந்து தள்ளுகின்றனர். அதனை சூழ உள்ள பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அந்த புகைப்படத்தில் எமது மகனும் உள்ளார்.
அதன் பின்னர் 2010ம் ஆண்டு தென்றல் வானொலியில் இராணுவத்தினரிடம் 2007 , 08 கால பகுதியில் சரணடைந்த விடுதலை புலி உறுப்பினர்கள் 200 பேரை விடுதலை செய்ய போவதாக அறிவித்து அவர்களின் பெயர் விபரமும் அறிவிக்கப்பட்டது. அதில் எமது மகனுன் பெயரும் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் மகனை பற்றிய எந்த தகவலும் இல்லை. என தமது சாட்சியத்தில் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds