எமது தேசம் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி இணைப்பு)

(23.07.2015) தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் செயற்படுகின்றோம் எனதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (23) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் அறிமுகமும் ஊடகவியலாளர் சந்திப்பும்நடைபெற்றது. அவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் காலம் வந்தவுடன் திம்புக்கோட்பாடு என்றும் சுயநிர்ணயம் என்றும் கத்தித் திரிபவர்கள் தேர்தல் முடிவடைந்த மறுநாளே 13ம்திருத்தச்சட்டத்திற்குள் மாகாண சபை அதிகாரம் எங்களிற்கு போதும் என்று கூறுகின்றார்கள்.
கடந்த 30 வருடங்களிற்கு முன்பு மாகாணசபைதான் தமிழர்களிற்கு தீர்வு என திணிக்கப்பட்டபோது அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இன்று குத்துக்கரணம்அடித்து மாகாணசபையே தமிழருக்கான தீர்வின் ஆரம்பப் புள்ளி எனக்கூறி மாகாணசபையில் ஆட்சி அமைத்துள்ளார்கள்.

கடந்த 2010 இற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகாரங்களிற்குப் பொறுப்பாக நாம் இருந்தபோது வெளிநாட்டுத் தூதுவர்களைச்சந்திக்கின்றவேளை தமிழ்த் தேசத்தை அங்கீகரிப்பதே தமிழர்களிற்கான தீர்வு என வலியுறுத்துவோம்.
அப்போது அவர்கள் எங்களிற்கு கூறுவார்கள் இது புலிகளுடைய கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரப் பரவலாக்கத்திற்குச் சம்மதிக்கின்றது.தேசியம், சுயநிர்ணயம் என்பது புலிகளுடைய கருத்து அதனை ஏற்கமுடியாது. மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின் கருத்தினையே எம்மால்ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவர்கள் கூறினார்கள்.
தேர்தல் காலத்தில் திம்புக் கோட்பாடுதான் தீர்வு தேசியத்தை தாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம் என்று கூறி வாக்குகளைப் பெற்றபின்னர் தேர்தலிற்கு மறுநாள் 13ம் திருத்தமே தீர்வு மாகாணசபையே ஏற்றுக்கொள்கின்றோம் மக்கள் அதற்கே ஆணை வழங்கினார்கள் என்று கூறுவார்கள்.
இவ்வாறு திட்டமிட்ட ரீதியில் காலங்காலமாக மக்களை ஏமாற்றுபவர்களை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். எம்மைப் பொறுத்தவரை தமிழ்த்தேசத்தின் எதிர்காலம் ஒரு திருப்புமுனையில் இருக்கின்றது. முன்பிருந்த இதே நிலைமை தொடருமாயின் இன்னும் ஐந்து வருடத்தில் தமிழ்த்தேசியத்தின் இருப்பு அழிந்துபோய்விடும்.

எம்மைப்பொறுத்தவரை மாற்றம் அத்தியாவசியமானது. மாற்றத்தை ஏற்பாடுத்தாது கடைசிவரைக்கும் எம் இனத்தைக் காப்பாற்ற முடியாது. அந்தமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடனேயே நாங்கள் தேர்தலில் களம் இறங்கியுள்ளோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடைய நிலைப்பாடு தமிழ் மக்களுடைய நிலைப்பாடு. தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்குவதற்கு முன்பே ஒருநிலைப்பாடு இருந்தது.
அந்த நிலைப்பாடு மிதவாதிகளால் 1976 ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டுவிட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழமே தீர்வு என்றார்கள்.

நாம் திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு நாட்டிற்குள் இரு தேசத்தை உருவாக்குவோம். தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையின்அடிப்படையில் தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் செயற்படுகின்றோம். இதனை வேறு ஒரு தரப்பு முன்னெடுத்தாலும் அதனை நாங்கள்ஏற்றுக்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds