என்னை ஒதுக்கினால் திமுகவிற்கு இதுதான் நடக்கும் ! -அழகிரி

azhagirilaugh6002 (1)சட்டமன்றத் தேர்தலில் வைகோவின் கண்ணாமூச்சி ஆட்டம் ஒருபுறம் இருந்தாலும், மதுரையில் தி.மு.கவை குறிவைத்து அழகிரி நடத்திய ஆட்டங்கள் தேர்தல் களத்தை அதிர வைத்தன. ‘தேர்தல் முடிவுகளால் அண்ணன் ரொம்ப உற்சாகத்தில் இருக்கிறார்’ என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஒருவர், ” மதுரை, சத்யசாய் நகரில் உள்ள மு.க.அழகிரியின் வீட்டில் காலையில் இருந்தே அவரது ஆதரவாளர்கள் குழுமி விட்டனர். தேர்தல் முடிவுகளைப் பார்க்க ஆர்வத்தோடு தொலைக்காட்சி முன்பு அமர்ந்தார் மு.க.அழகிரி. ஆதரவாளர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசினார். ‘அ.தி.மு.க முன்னிலை’ என டி.வியில் செய்தி ஓடும்போது, பலமாக சிரித்தார். எங்களைப் பார்த்து, ‘ நான் சொன்னதுதான நடந்துருக்குன்னு’  சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com