சற்று முன்
Home / செய்திகள் / “என்னை ஏன் திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை” – குப்பை கொட்டிய ஈசன்

“என்னை ஏன் திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை” – குப்பை கொட்டிய ஈசன்

கொழும்புத்துறையிலுள்ள மாதர் சங்க கட்டடத்திறப்பு விழாவிற்கு தன்னை விருந்தினராக அழைக்கவில்லை எனக் கூறி யாழ் மாநகர துணை முதல்வர் ஈசன் மாதர் சங்கத்தினருடன் முரண்பட்டதோடு பிறிறொரு உறுப்பினர் முலம் தாம் அழைத்திருந்த யாழ் மாநகரசபையின் துப்பரவுப் பணியாளர்களையும் அங்கிருந்து விரட்டியதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் வாகீசத்திற்குத் தெரிவித்த மாதர் சங்கத்தினர்,

எமது மாதர் சங்க கட்டடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதன் அழைப்பிதழ் முன்னர் வெளியிட்டவுடன் வட்டாரப் பிரதிநிதியான தன்னை அழைக்கவில்லை எனக் குறி எம்முடன் முரண்பட்டுக்கொண்டார்.

எமது வட்டார உறுப்பினராக பதவிக்கு வரும்வரை எமது குறைகளைக் கேட்டு ஓடி ஓடி வந்த அவரின் செயற்பாடுகள் பதவிக்கு அவர் வந்தபின் முற்றாக மாறிவிட்டன. அவர் எமது வட்டாரத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் செயல்களுக்கே துணை போகின்றார்.

வீதிப் பிரச்சனையில் எமது மக்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. எமது குடிநீர் கிணற்றினை மூடிவிட்டார். இவ்வாறு அவரது விரும்பத்தகாத செயற்பாடுகள் காரணமாக வட்டார பிரதிநிதியாக இருந்தும் அவரை முக்கிய விருந்தினராக அழைக்கவில்லை.

இதனால் மேலும் காழ்ப்புணர்வு அடைந்த அவர் வீதியின் மதகு துப்பரவு செய்வதாக் கூறி சில மாநகரசபை உறுப்பினர்களை அழைத்து மதகுக்குள் இருந்த கழிவுகளை எடுத்து எமது மாதர் சங்க வளவினுள் கொட்டிவிட்டுச் சென்றுவிட்டார். அதனை நாங்கள் அகற்றினோம்.

நேற்றுமாலை திறப்புவிழா நடைபெறவிருந்த நிலையில் காலையில் எமது வட்டாரத்தில் வசிக்கும் யாழ் மாநகரசபையின் பிறிதொரு உறுப்பினர் ஊடாக யாழ் மாநகரசபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்களை அழைத்து துப்பரவுப் பணிகளை மேற்கொண்டிருந்தோம்.

அதன்போது அங்கு வந்த ஈசன் எம்மை மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டியதோடு உங்களை அழைத்துவந்த உறுப்பினரை விட எனக்குத்தான் அதிகாரம் இருக்கிறது நான் சொல்கின்றேன் சென்றுவிடுங்கள் என அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுத்திகரிப்புத் தொழிலாளிகளை விரட்டிவிட்டுச் சென்றுவிட்டார். – எனத் தெரிவித்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com