எனது மகனை ஆமியும் ஈபிடிபியுமே கடத்தினர் – தயார் ஒருவர் சாட்சியம்

எனது மகனை கடத்தியவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் கச்சேரிப்பகுதியிலுள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த ரஞ்சித் என்ற அதிகாரி மறுநாள் வீட்டிற்கு வந்து எனது தெலைபேசியைப் பறித்துச் சென்ற மூவரில் ஒருவர் ஈபிடிபி கடைசியைச் சேர்ந்தவர் என தயார் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்த சாட்சியமர்வில் ஈச்சமோட்டையை சேர்ந்த முத்துலிங்கம் கொலஸ்ரினா என்பவர் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில்
ஈச்சமோட்டையில் உள்ள எமது வீட்டுக்கு 2007ம் ஆண்டு 3ம் மாதம் 17ம் திகதி சிவில் உடையில்  இரவு 10 மணியளவில் வந்த 7 பேர் எனது மகனான முத்துலிங்கம் மலரவனைப் பிடித்துச் சென்றனர் அப்போது அவனுக்கு வயது 19.
அப்போது நான் கூறினேன் நாளை காலையில் நானே மகனை முகாமி;ற்கு அழைத்துவருகின்றேன் இப்போது அவனை விட்டுவிட்டுச் செல்லுங்கள் என கதறினேன். அவர்கள் கேட்கவில்லை.மகன் கத்த கத்த தம்முடன் இழுத்து சென்றானர்.
மகனை இழுத்து செல்கையில் நானும் பின்னால் கத்திக்கொண்டு சென்றேன் என்னை தள்ளிவிட்டு வெளியில் நின்ற வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
மகனை கொண்டு சென்ற மறுநாள் காலையில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டில் இருந்த எமது தொலைபேசியை பறித்து சென்றனர். அதில் ஒருவர் ஈ.பி.டி.பி. உறுப்பினர் அவரை அடையாளம் கண்டு கொண்டு அன்றைய தினமே யாழ்.ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்திற்கு சென்று டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையிட்டேன். அவர் தனக்கு தெரியாதெனக் கூறிவிட்டார். பின்னர் ஆனந்தசங்கரி ஐயாவிடம் சென்று அவரிடமும் மகனை மீட்டுத்தர உதவி கோரினேன் எனது மகன் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் மகனை பற்றிய தகவல் எதுவும் இல்லை என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com