சற்று முன்
Home / செய்திகள் / எனக்கான மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மக்களுக்கு பகிா்ந்து கொடுப்பேன்.

எனக்கான மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மக்களுக்கு பகிா்ந்து கொடுப்பேன்.

இலங்கை மக்கள் என்னை ஜனாதிபதியாக தோ்வு செய்தால் என்னுடைய மாதாந்த சம்பளம் மற்றும் விசேட கொடுப்பனவகளை மக்களுக்கு வழங்குவேன்.

மேற்கண்டவாறு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸ கூறியிருக் கின்றாா். அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று

இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், 45 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தினசரி 900 ரூபாய் என்ற ஊதியத்தில் தப்பிப் பிழைக்கின்றனர்

என கூறினார்.எனவே வறுமையை ஒழிப்பதற்கும் ஏழைகளுக்கு தன் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் அவரது மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை

நன்கொடையாக அளிப்பதாக அவர் உறுதியளித்தார்.மேலும் நாட்டின் வருவாயில் பெரும் பகுதியால் பயனடைவது பணக்காரர்கள்தான் என சுட்டிக்காட்டிய

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாட்டின் வருமானத்தில் ஐந்து சதவிகிதம் மட்டுமே ஏழைகளால் பயன்படுத்தப்படுகிறது என கூறினார்.

அத்தோடு இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com