எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த நான் தயாரில்லை – ஜனாதிபதி

‘இந்த நாட்டின் எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த நா

ன் தயாரில்லை’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கடந்த யுத்த சமயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் பிரேரணைகளில் இந்த நாட்டின் எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த நான் தயாரில்லை என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியின் புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் மற்றும் விருசர சலுகை அட்டைகளை படைவீரர்களுக்கு வழங்கும் நிகழ்வில் நேற்றுமுன்தினம் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில் ,

தாய்நாட்டுக்காக போராடிய வீரமிகு படையினரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகுமென தெரிவித்த ஜனாதிபதி , நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் வீரமிக்க படையினர் தொடர்பில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தான் பொறுப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார்.

இதற்கு முன்னர் ஒருபோதும் இருந்திராத சர்வதேச நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இந்த யுகத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ளது. அதன் பயன் என்னவென சிலர் கேள்வி எழுப்புவதாக தெரிவித்த ஜனாதிபதி , இந்த சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை நாட்டினதும் மக்களினதும் கௌரவத்தையும் வீரமிக்க படையினரையும் பாதுகாப்பதற்கு பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதுடன் படையினர் தொடர்பில் எழும் சிக்கலான நிலமைகளின் போது நேரடியாக இலங்கையுடன் இருப்பதாக உலகின் பலமிக்க அரச தலைவர்கள் தன்னிடம் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

போர் இடம்பெற்ற காலத்தில் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிய படை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் போர் வீரர்கள் தொடர்பில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினைக்காகவும் தான் பொறுப்புக் கூறுவதாக அனைவரிடமும் தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் தேசிய பாதுகாப்புடன் தொடர்பற்ற விடயங்களில், அதாவது ஊடகவியலாளர்கள், விளையாட்டு வீரர்களின் கொலை, தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் யாராவது ஒருவர் தவறிழைத்திருந்தால், அவர் எந்த தரத்திலிருந்தாலும் அவரை பாதுகாக்கும் இயலுமை தனக்கு இல்லையென்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

நினைவு படிகத்தை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மாணவகளிடம் கையளித்தார்.

05ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய மற்றும் விளையாட்டில் ஆற்றலை வெளிப்படுத்திய கல்லூரி மாணவர்களுக்கு விருதுகளையும் பரிசில்களையும் வழங்கியதுடன், பல்கலைக்கழக தகைமை பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில், ஆங்கிலக் கல்வி மற்றும் சுயதொழில் பாடநெறிக்கான புலமைப்பரிசில்கள் போன்றவற்றையும் ஜனாதிபதி இதன்போது வழங்கினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பீ.நாவின்ன, தயாசிறி ஜயசேகர, அகில விராஜ் காரியவசம், வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க, முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க மற்றும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள், குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியின் அதிபர் டி.ஏ.ரத்நாயக்க மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com