எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை – ஐ.தே.க 107 ஆசனங்கள் ஐ.ம.சு.கூ 95 ஆசனங்கள் த.தே.கூ 16 ஆசனங்கள்

நடைபெற்று முடிந்த இலங்கையின் 15ஆவது நாடாளுமன்றத் தேர்தலின்   ஐக்கிய தேசியக் கட்சி 107 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 95 ஆசனங்களையும், பெற்றுள்ள அதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சி 16 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 5 ஆசனங்களையும்,பெற்றுள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.தே.கட்சி ஆட்சியமைக்க இன்னும் 6 ஆசனங்கள் தேவை.மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பிரதி நிதித்துவத்தினையும் சேர்த்தால் மேலும் 05 ஆசனம் ரணில் தலைமைக்கு தேவைப்படும்.

ஜே.வி.பி ரணில் தலைமைக்கு ஆதரவு வழங்க முன் வராது. ஆகவே இருக்கின்ற வழி முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட பல பிரதி நிதிகளை ( மைத்திரி ஆதரவாளர்களை உள்வாங்குவது), தமிழரசுக் கட்சியின் ஆதரவைக் கோருவது. இரண்டும் சாத்தியமானதே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அமைச்சுப் பொறுப்புகளை வகிக்க முன்வரமாட்டார்கள் என நம்பப்படுகிறது. சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட 30க்கும் அதிகமான பிரதிநிதிகள் ( தீவிர மகிந்த விசுவாசிகளைத் தவிர ) ரணிலின் தலைமையில் தேசிய அரசாங்கம் எனும் பெயரில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளையும் பெற்று ஆட்சிக்கு பெரும் பான்மைப் பலத்தினை வழங்குவர் என நம்பலாம்.

ஆகவே, ரணில் தலைமையிலான அரசாங்கம், சிக்கலின்றி அமைவதும் தேசிய அரசாங்கம் எனும் பெயரில் பதவிக்கு வருவதும் உடன் நடைபெற எந்தத் தடையும் இல்லை. ஜே,வி,பியும், மகிந்த தலைமையிலான பிரிவினரும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து தமது அரசியலை முன்னெடுப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com