சற்று முன்
Home / செய்திகள் / எதிர்க்கட்சித் தலைவர் ரெம்ப நல்லவர் – ”சு.க 16 பேர் அணி” புகழாரம்

எதிர்க்கட்சித் தலைவர் ரெம்ப நல்லவர் – ”சு.க 16 பேர் அணி” புகழாரம்

எந்தப் பிரதான பிரச்சினைகளையும் பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துடனேயே தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே எதிர்க்கட்சித் தலைவர் கொண்டிருப்பதாக 16 பேர் குழு சார்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட டிலான் பெரேரா எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

அரசிலிருந்து விலகிய சு.க 16 பேர் குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (30) காலை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலைமைகள், எதிரணியில் ஒன்றாக செயற்படும் விதம், புதிய யாப்பு உருவாக்கும் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஆராயப்பட்டதாக அறிய வருகிறது.

சு.க 16 பேர் குழுவுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 10.30 முதல் 1.00 மணி வரை சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டிலான் பெரேரா எம்.பி தெரிவித்ததாவது,

எதிர்க்கட்சித் தலைவருடன் சுமுகமாக சந்தித்து பேசினோம்.சு.க 16 பேர் குழு எதிர்க்கட்சியில் செயற்படும் விதம் குறித்தும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் பேசினோம்.சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

எதிர்க்கட்சியில் செயற்படுகையில் எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து எவ்வாறு எதிரணியில் செயற்படுவது என்ற விடயம் பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சியின் தலைவராகவும் இருக்கும் சம்பந்தன் ஐயாவுடன் பல்வேறு பிரச்சினைகளில் இணைந்து செயற்படுவது அவசியம்.எந்த பிரச்சினையின் போதும் பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்களின் விருப்பத்துடனே அதற்கு தீர்வு காண வேண்டும் என்ற விடயத்தில் அவரின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.

அவர் எந்த ஒரு காலத்திலும் ஆளும் கட்சியில் இருந்தது கிடையாது. நடுநிலை நிலைப்பாடுள்ள தலைவர் அவர். அவருடனான சந்திப்பு எமது அரசியல் செயற்பாடுகளுக்கும் நாட்டின் அரசியல் செயற்பாட்டுக்கும் முக்கியமானது.

எஸ்.பி திசாநாயக்க எம்.பி குறிப்பிட்டதாவது,

அவருக்கு ஜே.ஆர். மட்டுமன்றி சந்திரிக்கா குமாரதுங்கவும் கூட அமைச்சு பொறுப்பு ஏற்குமாறு அழைத்தனர். ஆனால் அவற்றை அவர் மறுத்தார்.நீண்ட அரசியல் அனுபவமுள்ள தலைவர் என்ற வகையில் அவரின் அனுபவங்களையும் பயன்படுத்தி நாட்டில் மீண்டும் சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரச்சினை எழாதிருக்கவும் சகல இனங்களும் ஒரே இனமாக வாழும் வகையில் நாட்டை கட்டியெழுப்புவதற்குத் தேவையான சட்டத்தை உருவாக்கும் சூழலை உருவாக்கவும் முடியும் என நம்புகிறோம். இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது.

சுசில் பிரேம் ஜெயந்த் எம்.பி கூறியதாவது,

எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டும். அந்த வகையிலே இந்த சந்திப்பு நடந்தது. எமது குழுவுக்கான நேர ஒதுக்கீடு பற்றியும் பேசினோம். ஏற்கெனவே முன்னாள் ஜனாதிபதியையும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.யு குணசேகரவையும் சந்தித்தோம். அடுத்து முஸ்லிம் கட்சிகளையும் சந்திக்க இருக்கிறோம்.

தற்பொழுது வாழ்க்கைச்செலவு உயர்வு பிரச்சினை பிரதானமாக உள்ள நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறை குறித்து பேசிப்பயனில்லை. எதிர்க்கட்சியிலுள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது செயற்திட்டமொன்றை தயாரித்து சமூகமயப்படுத்த வேண்டும்.இதற்கே அரசில் இருந்தவாறு முயன்றோம்.

சந்திம வீரக்கொடி எம்.பி

இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவற்காக சுதந்திரக் கட்சி தன்னை அர்ப்பணித்த கட்சி. நாட்டிலுள்ள சகல இனங்களுடனும் இணைந்து செயற்படத் தயார் என த.தே.கூ தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தெரிவித்தார். தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் என்ற வகையில் இதனை வரவேற்கிறோம்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com